[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

ராணுவ உடையில் பேட்டில் ஆட்டோகிராப் போடும் தோனி - வைரலாகும் படம்

ms-dhoni-s-picture-of-signing-bat-on-army-duty-in-kashmir-goes-viral

காஷ்மீரில் ராணுவ படையுடன் இணைந்துள்ள தோனி ராணுவ சீருடையில் பேட்டில் ஆட்டோ கிராப் போடும் படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். காஷ்மீரில், இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ராணுவப் பயிற்சி பெற இருப்பதால், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி, தோனி கேட்டுக்கொண்டிருந்தார். 

இதையடுத்து அவர், ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சிப் பெற்றார். நேற்று முதல், ‘விக்டர் படை’யுடன் இணைந்து காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்.

            

இந்நிலையில், தெற்கு காஷ்மீரில் பணியில் இருக்கும் தோனி ராணுவ சீருடையில் பேட் ஒன்றில் ஆட்டோகிராப் போடும் படம் வைரலாகி வருகிறது. சக வீரர் ஒருவர் தோனியிடம் ஆட்டோ கிராப் பெற்றுள்ளார். வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை காஷ்மீரில் ரோந்து பணியில் அவர் ஈடுபட உள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close