[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரள அரசு வழங்கும் நீரை தமிழக அரசு ஏற்க மறுத்ததாக வந்த தகவலில் உண்மையில்லை - அமைச்சர் வேலுமணி
  • BREAKING-NEWS தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மாமூல் வசூல், லஞ்சம் வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்துறை செயலர், டிஜிபி 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
  • BREAKING-NEWS வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

கோபா அமெரிக்கா கால்பந்து: அர்ஜென்டினாவை வென்றது சிலி

chile-won-the-copa-america-football-cap

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் சிலி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணியை பெனால்டி சூட் அவுட்டில் 4 - 2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், இரு அணிகளும் சமபலத்துடன் விளையாடின. வழக்கமான 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் கூடுதல் நேரம் ‌‌வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் கோல் விழாததால், சாம்பியனை தீர்மானிக்க பெனால்டி சூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

பெனால்டி சூட்அவுட்டின் முதல் வாய்ப்பை இரு அணி வீரர்களும் தவறவிட்டனர். அர்ஜென்டினா அணியில் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி, லூகாஸ் ரோட்டிகோ‌ ஆகியோர் கோல் வாய்ப்புகளை கோட்டைவிட்டனர். சிலி வீரர்கள் அடுத்த 4 வாய்ப்புகளையும் கோலாக்கினர். முடிவில் 4 - 2 என்ற கோல் கணக்கில் சிலி அணி‌ வெற்றி பெற்று சா‌ம்பியன் பட்டத்தை தக்கவைத்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close