[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

’தோனியின் நாட்டுப்பற்று’: சல்யூட் அடிக்கும் வெஸ்ட் இண்டீஸின் காட்ரெல்!

west-indies-sheldon-cottrell-salutes-ms-dhoni-s-inspirational-love-for-country

தோனியின் நாட்டுபற்று உத்வேகம் தருவதாக இருக்கிறது என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். காஷ்மீரில், இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற அவருக்கு அனுமதி வழங்கப் பட்டதை அடுத்து, பணியில் இணைந்தார். வரும் 31 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை, விக்டர் படையுடன் இணைந்து காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட இருக்கிறார்.  இதற்காக வெஸ்ட் இண்டீஸூக்கு செல்லும் இந்திய அணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார்.  தோனி ராணுவ பயிற்சிப் பெறுவதை கவுதம் காம்பீர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலர் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் காட்ரெல், தோனி ராணுவ பயிற்சிப் பெறுவதைப் புகழ்ந்துள்ளார். முன்னாள் ராணுவ வீரரான காட்ரெல் ட்விட்டரில், ‘’இந்த மனிதர் (தோனி) களத்தில் நின்றால் உத்வேகம். இவர் சிறந்த தேச பக்தர். கிரிக்கெட்டுக்கு அப்பால் நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர். கடந்த சில நாட்களாக வீட்டில் இருப்பதால் இதை பிரதிபலிக்க நேரம் கிடைத்தது’’ என்று தெரிவித்துள்ளார். 

அடுத்து, 2011 ஆம் ஆண்டு தோனி, கவுரவ லெப்டினென்டாக பொறுப்பேற்ற வீடியோவையும் பதிவு செய்து, ‘’என்னை போலவே நீங்களும் மகிழுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close