[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

மாறுகிறதா ’பவுண்டரி’யை வைத்து வெற்றியை தீர்மானிக்கும் முறை?

icc-cricket-committee-to-discuss-boundary-count-back-rule-in-its-next-meeting

’பவுண்டரி’களின் எண்ணிக்கையை வைத்து வெற்றியை தீர்மானிக்கும் முறையை மாற்றுவது குறித்து சர்வதேச கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டி சமனில் முடிந்ததால், சூப்பர் ஓவர் மூலம் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. சூப்பர் ஓவரும் சமனில் முடிந்ததால், அதிக பவுண்டரி அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி, கோப்பையை வென்றதாக அறிவிக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த முறையை நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அனில் கும்ப்ளே தலைமையிலான சர்வதேச கிரிக்கெட் கமிட்டி, இதுபற்றி கூடி விவாதிக்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மானேஜர் ஜியாஃப் அலர்டைஸ் தெரிவித்துள்ளார். 

‘போட்டி சமனில் முடிந்தால், சூப்பர் ஓவர்படி வெற்றியை தீர்மானிக்கும் முறை 2009 ஆம் ஆண்டில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பவுண்டரி முறையில் வழங்கப்பட்ட முடிவு பற்றி புகார் எழுந்தால், அதை மாற்றுவது குறித்து ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படும்’’ என்று அவர் தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close