[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான டெஸ்ட்: 5 விக்கெட் வீழ்த்தினார் நதீம்

nadeem-5-fer-puts-india-a-ahead-after-day-one

வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்திய ஏ அணி வீரர் சப்னாஸ் நதீம் 5 விக்கெட் வீழ்த்தினார்.

இந்திய ஏ அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து, அந்த நாட்டு ஏ அணியுடன் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றது. அதிகாரப்பூர்வமற்ற இந்த தொடரை 4-1 என்ற கணக்கில் மணீஷ் பாண்டே தலைமையிலான இந்திய ஏ அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளும் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன.

இந்திய ஏ டெஸ்ட் அணிக்கு, ஹனுமா விஹாரி கேப்டனாக செயல்படுகிறார். முதல் போட்டி ஆண்டிகுவாவில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங்கில் ஈடுபட்ட வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி, முதல் இன்னிங்சில் 228 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகப்பட்சமாக அந்த அணியின் கார்ன்வால் 59 ரன்னும் பிளாக்வுட் 53 ரன்னும் எடுத்தனர். இந்திய ஏ அணி தரப்பில் சுழல் பந்துவீச்சாளர் நதீம் 5 விக்கெட்டை வீழ்த்தினார். முகமது சிராஜ், மார்கண்டே தலா 2 விக்கெட்டை சாய்த்தனர். 

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய ஏ அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக பஞ்சாலும் ஈஸ்வரனும் களமிறங்கினர். ஈஸ்வரன் 28 ரன்னில் ஆட்டமிழக்க, பஞ்சால் 31 ரன்னுடன் சுப்மான் கில் 9 ரன்னுடனும் ஆடி வருகின்றனர். 2 வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. 


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close