[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

இன்ஸ்டாகிராமில் கோலியின் ஒரு ஸ்பான்சர் பதிவுக்கு எவ்வளவு தெரியுமா..?

virat-kohli-the-sole-cricketer-in-instagram-s-rich-list-for-2019

இன்ஸ்டாகிராமில் ஸ்பான்சர் பதிவுகள் மூலம் பணம் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் வரிசையில் ஒரே ஒரு கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இடம்பெற்றுள்ளார்.

இன்ஸ்டாகிராம் தளத்தில் ஸ்பான்சர்களின் பதிவுகளை பிரபலங்கள் தங்களின் கணக்குகளிலிருந்து பதிவிடுவதற்கு தொகை வசூலிப்பது வழக்கம். அந்தவகையில் அவர்கள் வசூலிக்கும் தொகை கணக்கின்படி, இன்ஸ்டாகிராமில் பணக்காரர்கள் யார் என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்படி விளையாட்டு வீரர்களில் ஸ்பான்சர் பதிவுகளுக்கு யார் அதிக பணம் சம்பாதிக்கின்றனர் என்ற பட்டியல் வெளியிடப்பட்டது. 

இந்தப் பட்டியலில் உலகளவில் முதல் 10 இடங்களில் ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் மட்டுமே இடம்பெற்றுள்ளார். அந்த வீரர் இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தான். விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 38 கோடி பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்பான்சர் தொடர்பாக ஒரு பதிவுக்கு விராட் கோலி 19,600 டாலர் வசூலிக்கிறார். அதாவது ஒரு பதிவிற்கு 1 கோடியே 35 லட்சத்து 66ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறார். உலகளவில் இவ்வாறு வருவாய் ஈட்டும் வீரர்கள் பட்டியலில் விராட் கோலி ஒன்பதாவது இடத்தில் உள்ளார். 

இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் போர்ச்சுகலின் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். அவர் தனது கணக்கிலிருந்து ஒரு ஸ்பான்சர் பதிவிற்கு 975000 டாலர் வசூலிக்கிறார். இவருக்கு அடுத்தப் படியாக நெய்மார்(722000 டாலர்), மெஸ்ஸி(64800 டாலர்) ஆகிய வீரர்கள் உள்ளனர்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close