[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

அயர்லாந்துக்கு எதிராக தடுமாறி வரும் உலக சாம்பியன் இங்கிலாந்து 

england-loses-9-wickets-for-89-against-ireland

அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழந்து தடுமாறிவருகிறது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதற்கு பிறகு மீண்டும் டெஸ்ட் போட்டியில் இன்று களமிறங்கியுள்ளது. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்தப் போட்டி லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இது நான்கு நாட்கள் மட்டுமே நடைபெறும். இப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பெர்ன்ஸ்(6) மற்றும் ராய்(5) ஆகியோர் சொர்ப ரன்களில் அவுட் ஆகினர். இதனைத் தொடர்ந்து  டென்லி(23) சற்று தாக்குப் பிடித்தார். எனினும் மறுமுனையில் கேப்டன் ரூட் 2 ரன்களுடனும், பெரிஸ்டோவ் ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர். இவர்களை தொடர்ந்து மோயின் அலி மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகிய இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர். 

இங்கிலாந்து அணி 23.4 ஓவர்களில் 10 விக்கெட் இழந்து 85 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்கிஸில் தடுமாறியது. உலக சாம்பியனான இங்கிலாந்து அணி கத்துக்குட்டி அயர்லாந்து அணியிடம் தடுமாறியது  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close