[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

“என்னைவிட நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் விருதுக்கு பொருத்தமானவர்” - பென் ஸ்டோக்ஸ்

stokes-turns-down-new-zealander-of-year-award-nomination-says-williamson-more-deserving

நியூசிலாந்து நாடு அளித்த கவுரவத்தை இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஏற்க மறுத்து நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனை பரிந்துரைத்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றியவர் இவர்.  நியூசிலாந்துக்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில் அவர் அடித்த 84 ரன்கள், இங்கிலாந்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது. பின்னர் நடந்த சூப்பர் ஓவரிலும் சிறப்பாக செயல்பட்டார். இங்கிலாந்து அணிக்காக, பென் ஸ்டோக்ஸ் விளையாடினாலும் அவர் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். தனது 12 வது வயதில் குடும்பத்தினருடன் இங்கிலாந்து சென்ற அவர், அந்நாட்டுக்காக விளையாடி வருகிறார். அவர் பெற்றோர் நியூசிலாந்துக்கு திரும்பி கிறிஸ்ட் சர்ச்சில் வசித்து வருகின்றனர். 

இதனையடுத்து உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய அவரை கவுரவிக்க நியூசிலாந்து முடிவு செய்துள்ளது. இந்த வருடத்தின் சிறந்த நியூசிலாந்து நாட்டவர் என்ற விருதுக்கு அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவருடன் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் உட்பட மேலும் சிலர் அந்தப் பரிந்துரையில் இடம்பெற்றுள்ளனர். 

இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் இந்த கவுரவும் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், “நியூசிலாந்து நாட்டின் உயரிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் இந்த விருதுக்கு என்னைவிட தகுதியானவர்கள் நிறையே பேர் உள்ளனர். அதிலும் குறிப்பாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த விருதுக்கு மிகவும் பொருத்தமானவர். 

ஏனென்றால் அவர் நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் வீரர். அவர் நியூசிலாந்து அணியை இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக வழிநடத்தி வந்தார். ஆகவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த விருதை வில்லியம்சனுக்கு தர பரிந்துரை செய்வோம். என்னுடைய முதல் வாக்கு வில்லியம்சனுக்கு தான்” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close