[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

திருமணத்தில் இந்தி பாடலுக்கு நடனமாடிய டென்னிஸ் வீராங்கனை: வைரலாகும் வீடியோ

american-tennis-player-alison-riske-dances-to-bollywood-track-wows-sania-mirza

டென்னிஸ் வீராங்கனை அலிசன் ரிஸ்க்- ஸ்டீபன் அமிர்தராஜ் திருமணம் அமெரிக்காவில் நடந்தது. இதில் மணப்பெண் அலிசன், இந்தி பாடலுக்கு ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னையில் பிறந்த பிரபல டென்னிஸ் வீரர் அசோக் அமிர்தராஜ். விம்பிள்டன், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஏராளமான ஹாலிவுட் படங்களை தயாரித்துள்ளார். இவரது சகோதரர்கள் விஜய் அமிர்தராஜ், ஆனந் த் அமிர்தராஜ் ஆகியோரும் டென்னிஸ் வீரர்கள். இவர்கள் அமெரிக்காவில் வசித்துவருகின்றனர். ஆனந்த் அமிர்தராஜ் மகன் ஸ்டீபன் அமிர்தராஜ். இவரும் டென்னிஸ் வீரர். 

ஸ்டீபனும் பிரபல அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை அலிசன் ரிஸ்க்கும் காதலித்து வந்தனர். இவர்கள் காதலை குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டதை அடுத்து நேற்று முன் தினம் திருமணம் செய்துகொண்டனர். 

இதுபற்றி ட்வீட் செய்துள்ள ஸ்டீபன் அமிர்தராஜ், ‘’என் வாழ்க்கையில் சிறந்த நாள் இது. என் குடும்பத்தினர், நண்பர்கள், டென் னிஸ் வீரர்கள் முன்னிலையில் என் கனவு பெண் அலிசனை திருமணம் செய்துகொண்டேன். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி’’ என்று தெரிவித்துள்ளார். அலிசன் ரிஸ்க்கும், ’நான் அதிர்ஷ்டமான பெண்’ என்று திருமணம் பற்றி ட்வீட் செய்துள் ளார். 

திருமண நிகழ்ச்சியின் போது மணப்பெண் அலிசனும் அவர் சகோதரியும் ’பார் பார் தேகோ’ (Baar Baar Dekho) என்ற இந்தி படத் தில் இடம்பெறும் ’நாச்சே நே சாரே’ என்ற பாடலுக்கு நடனமாடினர். இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அலிசன், ‘எங்கே என் இந்திய ரசிகர்கள். உங்கள் அன்பை வெல்ல, பாலிவுட் பாடலுக்கு நடனம் ஆடி முயற்சி செய்திருக்கிறே ன்’’ என்று தெரிவித்துள்ளார்.  இந்த வீடியோவைக் கண்ட இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, அலிசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அலிசன் ரிஸ்க், நடனம் ஆடியுள்ள அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close