[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

விராத் கேட்டதால்தான் ஓய்வு முடிவை மாற்றினாரா தோனி?

did-virat-kohli-ask-ms-dhoni-to-stay-on

விராத் கோலி கேட்டுக்கொண்டதால்தான் தனது ஓய்வு முடிவை, தோனி மாற்றியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி. உலகக் கோப்பையை வென்ற முன்னாள் கேப்டனான இவர், சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. தனது எதிர்காலம் குறித்து அணி வீரர்கள் சிலரிடமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திடமும் தோனி பேசியதாகவும் தெரிகிறது. ஆனால், ஓய்வு குறித்து அவர் இதுவரை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகுவதாக கூறியுள்ள தோனி, அடுத்த 2 மாதங்கள் ராணுவத்துடன் இணைந்து பயிற்சிப் பெற இருக்கிறார். இந்நிலையில் விராத் கோலி கேட்டுக்கொண்டதால்தான், தனது ஓய்வு முடிவை தோனி மாற்றினார் என்று செய்தி வெளியாகியுள்ளது. 

‘’உலகக் கோப்பைத் தொடருக்கு பிறகு ஓய்வு பெறும் முடிவில்தான் தோனி இருந்தார். ஆனால் இப்போது ஓய்வு பெற வேண் டாம், கொஞ்சம் காத்திருங்கள் என்று கோலி கேட்டுக்கொண்டதால் தோனி, தன் முடிவை மாற்றியுள்ளார்’’ என்று விராத் கோலிக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.

’’தோனிக்கு உடல் தகுதி பிரச்னை ஏதுமில்லை. அணிக்குத் தேவை என்றால் வரும் உலகக் கோப்பை டி20 தொடர் வரை அவரால் சிறப்பாக விளையாட முடியும். ரிஷாப் விக்கெட் கீப்பராக இருக்கும்போது மாற்று வீரராக அனுபவம் வாய்ந்த தோனியை வைத்துக்கொள்ளலாம். மற்றொரு விக்கெட் கீப்பரை தேர்வு செய்வதற்குப் பதில் அந்த இடத்தில் தோனி இருந் தால் சிறப்பாக இருக்கும். ரிஷாப்புக்கு காயம் ஏற்பட்டால் பிரச்னையில்லாமல் தோனியை இறக்கிக் கொள்ளலாம் என்பது விராத் கோலியின் எண்ணம். அதோடு ரிஷாப்பும் அணியும் செட்டிலாகும் வரை, தோனியின் ஆலோசனை விராத்துக்குத் தேவை. அதனால் இன்னும் சில காலம் தோனி அணியில் இருக்க வேண்டும் என்பது கோலியின் ஆசை. இதற்காகவே ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்’’ என்றும் கோலிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். 

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணி தேர்வுக்கு முன், தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத், தோனியிடம் பேசி யுள்ளார். உலகக் கோப்பை டி-20 தொடருக்காக ரிஷாப் பன்டை தயார்படுத்துவதாகவும் அதனால் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் எதிர்காலம் குறித்து உடனடியாக முடிவெடுக்கும்படி தோனிக்கு அவர் எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close