[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

ஒரு நாள், டி20, டெஸ்ட்: தனித்தனி கேப்டன்களை நியமிக்கிறது பாக்.!

pakistan-cricket-board-mulling-split-captaincy-and-coaching

ஒரு நாள் கிரிக்கெட், டி-20, டெஸ்ட் போட்டிகளுக்கு தனித் தனி கேப்டன்களை நியமிக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக, பிடிஐ தெரிவித்துள்ளது.

உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, லீக் சுற்றோடு வெளியேறியது. இதனால் அந்த கிரிக்கெட் வீரர்கள் மீதும் கேப்டன் சர்பிராஸ் அகமது மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் குறுகிய ஓவர் போட்டிகளுக்கும் டெஸ்ட் தொடருக்கும் வெவ்வேறு கேப்டன்களையும் பயிற்சியாளரையும் நியமிக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதுபற்றி, அந்நாட்டு கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர், பிடிஐ செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்துள்ளார். 

’’உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன், இலங்கை, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுடன் பாகிஸ்தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் அணியை எப்படி மேம்படுத்தலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது. இதையடுத்து டி20, ஒரு நாள், டெஸ்ட் தொடர்களுக்கு தனித்தனி கேப்டன்களை நியமிக்கவும் தலைமை பயிற்சியாளரை நியமிக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த மாத இறுதியில் கிரிக்கெட் வாரிய கமிட்டி கூடும்போது, இந்த விவகாரம் பற்றி பேச இருக்கிறோம்’’ என அவர் தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close