[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

இந்திய அணி அறிவிப்பு: மணீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு

west-indies-tour-indian-squads-announced

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மணீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20, மூன்று ஒரு நாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில், முதல் 2 டி20 போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடாவில் ஆகஸ்ட் 3, மற்றும் 4 ஆம் தேதிகளில் நடக்கிறது. கடைசி டி20 போட்டியில் இருந்து மற்ற ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி மும்பையில் இன்று தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. டி20, ஒரு நாள் போட்டி மற் றும் டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக விராத் கோலியே நீடிக்கிறார். தோனி அணியில் இடம்பெறவில்லை. ரஹானே, அஸ் வின் ஆகியோர் டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரி ல் இருந்து பாதியில் வெளியேறிய, ஷிகர் தவான் அணியில் இடம்பிடித்துள்ளார். 

டி20 தொடருக்கான அணி:
விராத் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷாப் பன்ட், குணால் பாண்ட்யா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி.

ஒரு நாள் தொடருக்கான அணி: 
விராத் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷாப் பன்ட், ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், கேதர் ஜாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், கலீல் அகமது, நவ்தீப் சைனி.

டெஸ்ட் அணி:
விராத் கோலி (கேப்டன்), ரஹானே, மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரோகித் சர்மா, ரிஷாப் பன் ட், விருத்திமன் சாஹா, ஆர்.அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close