[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

வெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணி இன்று தேர்வு

india-s-squad-announcement-for-west-indies-tour-today

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு இன்று நடக்கிறது. உலகக் கோப்பை அரையிறுதியில் தோற்றதால் அணியில் மாற்றம் இருக்கும் என்று தெரிகிறது. 

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20, மூன்று ஒரு நாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் 2 டி20 போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடாவில் ஆகஸ்டு, 3, மற்றும் 4 ஆம் தேதிகளில் நடக்கிறது. கடைசி டி20 போட்டியில் இருந்து மற்ற ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி மும்பையில் இன்று தேர்வு செய்யப்படுகிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழு அணியை தேர்வு செய்கிறது. உலக கோப்பை தொடரில், இந்திய அணி அரைஇறுதியுடன் வெளியேறியதால், அணியில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தோனி இந்த தொடரில் இடம்பெறவில்லை என்று கூறிவிட்டதால் அவருக்கு பதிலாக ரிஷாப் பன்ட் சேர்க்கப்படுகிறார். மாற்று விக்கெட் கீப்பராக விருத்திமான் சாஹா சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது. ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் கோலி, பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதனால், ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்பார். டெஸ்ட் தொடரில், கோலி, பும்ரா இணைந்துகொள்ள இருக்கின்றனர். 

ஷிகர் தவான் காயத்தில் இருந்து குணமாகவில்லை என்பதால், அவருக்குப் பதிலாக கர்நாடகத் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் சேர்க்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close