[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

’ஓய்வு பெற இது சரியான நேரமல்ல’: தோனி பதிவின் பின்னணி!

ms-dhoni-to-play-t20-world-cup-truth-behind-viral-facebook-post-revealed

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இது சரியான நேரமல்ல என்று தோனி கூறியிருப்பதாக வெளியான பேஸ்புக் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததும் மூத்த வீரர் தோனி ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால், ஓய்வு குறித்து தோனி, இதுவரை எதுவும் சொல்லவில்லை. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகுவதாக கூறியுள்ள தோனி, அடுத்த 2 மாதங்கள் ராணுவத்தினருடன் இணைந்து தனது நேரத்தை செலவிட இருப்பதாக கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவரது பெயரில் இருக்கும் பேஸ்புக் பக்கத்தில், பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ‘உலக கோப்பை அரையிறுதியில் தோற்றதால் நீங்கள் ஏமாற்றம் அடைந்திருப்பீர்கள் என்பதை அறிவேன். எனது ஓய்வு பற்றி அதிகமாக பேசப் படுகிறது. அணியை விட்டு விலக இது உகந்த நேரமல்ல. ரசிகர்கள் கவலைப்பட தேவையில்லை. ஆஸ்திரேலியாவில் அடுத் த ஆண்டு நடக்கும் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடுவேன். தொடர்ந்து ஆதரவளிங்கள்’ என்று கூறப்பட்டுள் ளது.

தோனியே எழுதியிருப்பது போல இருக்கும் இந்தப் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. புளு டிக்குடன் வந்த பதிவு என்பதால் அதை உண்மை என்று பலர் நம்பினர். ஆனால், அது தோனி ரசிகர்கள் போலியாக உருவாக்கிய பதிவு என்றும் அது உண்மை யானது அல்ல என்றும் தெரிய வந்துள்ளது.
 

Advertisement:
Related Tags : DhoniT20 World CupFacebookதோனிஓய்வு
Advertisement:
Advertisement:
[X] Close