[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS ரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

வெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணி 21இல் அறிவிப்பு

selection-committee-to-meet-on-july-21-to-pick-india-s-squad-for-west-indies-tour

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி வரும் ஞாயிற்றுகிழமை தேர்வு செய்யப்படவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தலைமயில் இன்று கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்தக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. 

இந்நிலையில் இந்தத் தொடருக்கான இந்தியா அணி வரும் 21ஆம் தேதி ஞாயிற்றுகிழமை தேர்வு செய்யப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தத் அணி தேர்வில் தேர்வு குழுவினர் மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தக் கூட்டத்தில் முக்கிய விவாதம் இந்திய அணியின் அனுபவ வீரர் தோனியை சார்ந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்தத் தொடரில் முக்கிய வீரர்களான கோலி மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 3 தேதி முதல் டி20 போட்டியுடன் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் தொடரும் 2 டெஸ்ட் போட்டிகளும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close