[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS ரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

சச்சினுக்கு முன் ஹால் ஆஃப் ஃபேம்மில் திராவிட் இடம்பெற்றது ஏன் ?

sachin-tendulkar-inducted-in-icc-hall-of-fame-after-rahul-dravid-and-anil-kumble-here-s-why

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ என்ற கௌரவத்தை வழங்கியுள்ளது. இந்தியா சார்பில் 6ஆவது வீரராக சச்சின் டெண்டுல்கர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இவருக்கு முன்பு இந்தியா சார்பில் பிஷன் சிங் பேடி(2009), சுனில் காவஸ்கர்(2009),கபில் தேவ்(2009),அனில் கும்ப்ளே(2015), ராகுல் திராவிட்(2018) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

இந்நிலையில் இந்தப் பட்டியலில் சச்சினுக்கு முன்பு திராவிட் தேர்வானது ஏன்? என்பது பற்றி தெரிந்து கொள்வோம். 

ஐசிசி ‘ஹால் ஆஃப் ஃபேம்’ என்ற அந்தஸ்த்தை கடந்த 2009ஆம் ஆண்டு முதல் அளித்து வருகிறது. இந்தப் பட்டியலில் இடம்பெற பேட்ஸ்மேன் ஒருவர்  ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 8000 ரன்கள் மற்றும் 20 சதங்கள் அடித்திருக்கவேண்டும். அதேபோல பந்துவீச்சாளராக இருந்தால் அவர் ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டியில் குறைந்தது 200 விக்கெட்டுகள் எடுத்திருக்கவேண்டும்.

இந்த விக்கெட்டுகளை ஒருநாள் போட்டியாக இருந்தால் 30 ஸ்டைரிக் ரேட் வுடனும் டெஸ்ட் போட்டியாக இருந்தால் 50 ஸ்டிரைக் ரேட்வுடனும் எடுத்திருக்கவேண்டும். மேலும் இந்தப் பட்டியலுக்கு தேர்வாக வீரர்கள் ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் முடிந்து இருக்கவேண்டும். 

இந்த விதிமுறைகளின் படி இந்தியாவில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் திராவிட் ஆகிய இருவருமே தேர்ச்சி பெறுவார்கள். ஆனால் இந்தப் பட்டியலில் சச்சினுக்கு முன் திராவிட் தேர்வானார். இதற்கு காரணம் திராவிட் 2012ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013ஆம் ஆண்டு தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். எனவே சச்சினுக்கு முன்பு திராவிட் இந்தப் பட்டியலில் இடம் பிடித்தார். 

மொத்தமாக இந்தப் பட்டியலில் உலகளவில் 87 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் இங்கிலாந்திலிருந்து 28 பேரும், ஆஸ்திரேலியாவிலிருந்து 26 பேரும், வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து 18 பேரும், பாகிஸ்தானிலிருந்து 5 பேரும் இடம் பெற்றுள்ளனர். அத்துடன் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து 3 பேரும், இலங்கையிலிருந்து ஒருவரும் இந்தப் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close