[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

டி.என்.பி.எல். தொடர் இன்று தொடங்குகிறது

tnpl-2019-to-start-today-at-dindigul

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும், டி.என்.பி.எல். தொடர் இன்று தொடங்குகிறது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டி.என்.பி.எல். தொடர், 2016-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில் 4-வது டி.என்.பி.எல். தொடர், திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 15- ஆம் தேதி வரை நடக்கும் இந்த தொடரில் மதுரை பாந்தர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காஞ்சி வீரன்ஸ், காரைக்குடி காளை, கோவை கிங்ஸ், திருச்சி வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. 

இன்று நடக்கும் தொடக்க போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீசும், திண்டுக்கல் டிராகன்சும் மோதுகின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ், இந்த தொடரை இன்று மாலை தொடங்கி வைக்கிறார். 

இந்த தொடரில் நட்சத்திர வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், அபினவ் முகுந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர். 

இளம் வீரர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக நடத்தப்படும் இந்த தொடரில் இருந்துதான், வாஷிங்டன் சுந்தர், அஸ் வின் முருகன், ஜெகதீன், டி. நடராஜன், வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் ஐபிஎல் தொடருக்கு தேர்வானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close