[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

“தோனி அணியில் இடம்பெறுவார்.. ஆனால்...” - ரிஷப்க்கு முதல் வாய்ப்பு

ms-dhoni-won-t-be-first-choice-wicketkeeper-but-will-help-team-in-smooth-transition

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தோனி விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

உலகக் கோப்பை தொடருக்கு பின் தோனியின் ஓய்வு குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. தோனி இதுவரை ஓய்வு குறித்து எவ்வித கருத்தினையும் வெளிப்படையாக கூறவில்லை. இருப்பினும், தோனி ஓய்வு பெறவில்லை என்றாலும், அடுத்து வரும் தொடர்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என பிசிசிஐ நிர்வாகி ஒருவர் வெளிப்படையாகவே தெரிவித்து இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணி வரும் 19 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

        

இந்நிலையில், “இந்தியாவில் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் தோனி முதன்மையாக விக்கெட் கீப்பராக செல்லமாட்டார். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு அளிக்கப்படும். அந்த நேரத்தில் ரிஷப் பண்ட்க்கு தோனி வெளியில் இருந்து ஆலோசனை கூறுவார்” என்று தகவல்கள் கூறுவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், “பண்ட்க்கு அக்டோபர் மாதத்துடன் 22 வயது ஆகிறது. ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறும் போது அவருக்கு 23 வயது ஆகியிருக்கும். உலகக் கோப்பை தொடருக்கு தயார் ஆக இந்த ஒரு வருட காலம் அவருக்கு சரியாக இருக்கும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

தோனிக்கு தற்போதைக்கு ஓய்வு பெறும் திட்டம் ஏதுமில்லை என்றும் அடுத்த ஐபிஎல் தொடர் வரை நிச்சயம் அவர் இந்திய அணியில் இடம்பெறுவார் எனவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close