[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

வெளிநாடுகளில் மினி ஐபிஎல் கிரிக்கெட்

ipl-cricket

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து வெளிநாடுகளில் மினி ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த இந்திய கிரிக்கெட்‌ கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் இந்தப் போட்டியை நடத்துவது என தர்மசாலாவில் நடந்த செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் 8 அணிகளும், மினி ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்கும் என பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இரண்டு முதல் 3 வாரங்களுக்குள் போட்டிகளை நடத்தி முடிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர் நடைபெறும் தேதி, வடிவம் குறித்த அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். முதல் மினி ஐபிஎல் தொடர் அமெரிக்கா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close