[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS ரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

வெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!

fresh-faces-likely-fo-west-indies-tour

வெஸ்ட் இண்டீஸில் நடக்கும் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது. 

இந்திய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி அடுத்த மாதம் 3 ஆம் தேதி நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி வரும் 19ஆம் தேதி மும்பையில் தேர்வு செய்யப்பட இருக்கிறது. எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வு குழு, அணியை தேர்வு செய்கிறது. கேப்டன் விராத் கோலி, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது.

ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார். ஷிகர் தவான் காயத்தில் இருந்து மீண்டுவிட்டாரா என்பதும் இந்தத் தொடரில் தோனிக்கு வாய்ப்பிருக்கிறதா என்பது தெரியவில்லை. 

இந்நிலையில், இந்த தொடருக்கு இளம் வீரர்கள் சேர்க்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திய ஏ அணி, தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து அதிகாரபூர்வமற்ற ஒரு நாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையா டும் வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close