[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

விம்பிள்டன் டென்னிஸ் : மீண்டும் சாம்பியன் ஆனார் ஜோகோவிச்

novak-djokovic-defeats-roger-federer-in-record-breaking-wimbledon-match

விம்பிள்டன் தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஜோகோவிச் மீண்டும் சாம்பியன் பட்டம் பெற்றார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்புகளுக்கு மத்தியில் விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலும் நேற்று அனல் பறந்தது. சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் நீடித்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி, செர்பியா வின் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் பெற்றார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தனிச்சிறப்பான விம்பிள்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலகி ன் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சும், சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும் பலப்பரீட்சை நடத்தினர். ரசிகர் களின் எதிர்பார்ப்பில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் 4 செட்களை இருவரும் மாறி மாறி கைப்பற்றி அசத்தினர். வெற்றி யை தீர்மானிக்கும் 5-வது செட்டில் இரு வீரர்களும் பரஸ்பரம் விட்டுக்கொடுக்காமல் ஆடியதால், ஆட்டம் 12-12 என நீடித்தது. 


இதையடுத்து விம்பிள்டனில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விதிமுறைப்படி, டை-பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. அதை 7-க்கு 3 என கைப்பற்றிய ஜோகோவிச், 5-வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வசப்படுத்தினார். ஜோகோவிச் 7-க்கு 6, 1-க்கு 6, 7-க்கு 6, 4-க்கு 6, 13-க்கு 12 என்ற செட் கணக்கில் வென்று சாதனைப் படைத்தார். இந்தப்போட்டி, 4 மணி நேரம் 55 நிமிடங்கள் நடைபெற்றது. அதுவும் கடைசி செட் மட்டும் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஜோகோவிச் கைப்பற்றிய 16 வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close