[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

பும்ரா ஸ்டைலில் பந்து வீச ஓடி வரும் பாட்டி - வைரலாகும் வீடியோ

jasprit-bumrah-reacts-to-fan-s-mother-imitating-his-bowling-action

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவைப் போல மூதாட்டி ஒருவர் பந்து வீச ஓடி வரும் வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

இந்தியாவில் உலகக் கோப்பை கனவு அரையிறுதியில் தகர்ந்தது. லீக் போட்டிகளில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்திய இந்திய வீரர்களுக்கு அரையிறுதி கைகொடுக்கவில்லை. ஆனாலும் இந்திய வீரர்கள் பலரும் திறமையாக விளையாட்டை உலகக்கோப்பை தொடரில் வெளிப்படுத்தினர். ரோஹித் சர்மா, ஜடேஜா, பும்ரா போன்றவர்கள் அதிக கவனம் ஈர்த்தனர். 

குறிப்பாக பந்துவீச்சில் பும்ரா சிறப்பாக செயல்பட்டார். பும்ரா பந்துவீச்சை எதிரணி வீரர்கள் தொடவே அச்சப்பட்டனர். பும்ராவின் பந்துவீச்சு அடிக்க முடியாத நிலையில் இருக்கிறது என்றும் அவர் பந்துவீச்சில் கவனமாக ஆட வேண்டும் என்று நியூசிலாந்து வீரர்களுக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி எச்சரிக்கையெல்லாம் விடுத்தார். இலங்கைக்கு எதிரான போட்டியின்போது, வேகமாக 100 விக்கெட்டுகளை சாய்த்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்தார். 

தனது பிரத்யேக ஸ்டைல் மூலம் அனைவரையும் கவர்ந்த பும்ரா ஒரு மூதாட்டியையும் கவர்ந்துள்ளார். பும்ராவின் பந்துவீச்சு ஸ்டைலில் ஈர்க்கப்பட்ட மூதாட்டி அவரைப்போல பந்துவீச ஓடிவரும்  வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவை ஜஸ்ப்ரீத் பும்ராவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தன்னுடைய நாளை இனிமையாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close