[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

“30 நிமிட மோசமான ஆட்டம் கோப்பை கனவை தகர்த்தது” - ரோகித் உருக்கம் 

rohit-sharma-on-semifinal-defeat-we-failed-to-deliver-my-heart-is-heavy

ஒரு அணியாக சிறப்பாக செயல்பட தவறிவிட்டோம் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. எப்படியும் கோப்பையை இந்திய அணி கைப்பற்றிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த இந்திய ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது.

           

அதுவும், 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியில் நம்பிக்கை நட்சத்திரங்களான ரோகித் சர்மா, விராட் கோலி தலா ஒரு ரன்னில் அவுட் ஆனதை யாராலும் நம்ப முடியவில்லை. இந்த உலகக் கோப்பை தொடரில் 5 சதங்கள் விளாசியிருந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் சதம் அடிப்பார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

          

இந்நிலையில், அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவினை எழுதியுள்ளார். அதில், “ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக விளையாட தவறிவிட்டோம். 30 நிமிட மோசமான ஆட்டம், உலகக் கோப்பை வெல்லும் வாய்ப்பை பறித்துவிட்டது. என்னுடைய இதயம் கனமாக உள்ளது. உங்களுடைய இதயமும் அப்படிதான் இருக்கும் என நம்புகிறேன். தாய்நாட்டை கடந்து எங்களுக்கு அளவுகடந்த ஆதரவு கிடைத்தது பெருமிதமாக இருந்தது. நாங்கள் விளையாடும் இடமெல்லாம் ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி” என ரோகித் சர்மா உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

       

இதற்கு முன்பாக, கேப்டன் விராட் கோலியும் 45 நிமிட மோசமான ஆட்டமே தோல்விக்கு காரணம் என்று கூறியிருந்தார். இந்த உலகக் கோப்பை தொடரில் 648 ரன்கள் குவித்து ரோகித் சர்மா இதுவரை முதலிடத்தில் உள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close