[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS ரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

சச்சின் சாதனையை முறியடிக்க தவறிய ரோகித், வார்னர்

rohit-sharma-and-david-warner-as-they-misses-out-sachin-on-world-cup-record

உலகக் கோப்பை தொடரில் சச்சின் படைத்த ரன்கள் குவிப்பு சாதனையை ரோகித் ஷர்மா மற்றும் வார்னர் முறியடிக்க தவறிவிட்டனர்.

உலகக் கோப்பை தொடர் அனைத்து போட்டிகளையும் கடந்து இறுதிக்கட்டத்திற்கு சென்றுவிட்டது. நடந்த முடிந்த அரையிறுதிப் போட்டிகளில் இந்தியாவை வீழ்த்தி நியூஸிலாந்தும், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்டன. வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிப் போட்டி நடைபெறுகிறது. லீக் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்து புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் தோல்வியடைந்து வெளியேறிவிட்டன. அந்த அணிகள் வெளியேறியதுடன், ஒரு பெரும் சாதனையும் முறியடிக்கப்படாமல் போய்விட்டது.

ஒரே உலகக் கோப்பை தொடரில் இதுவரை அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை இதுநாள் வரை ‘காட் ஆஃப் கிரிக்கெட்’ எனப்படும் சச்சின் டெண்டுல்கர் தன் வசம் வைத்துள்ளார். 2003ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் சச்சின் 673 ரன்களை குவித்தார். அதுவே இன்று வரை சாதனையாகும். இந்த சாதனையை முறியடிக்க இந்தியாவின் ரோகித் ஷர்மா மற்றும் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகியோருக்கு நடப்பு உலகக் கோப்பையில் ஒரு வாய்ப்பு கிடைத்தும், அவர்கள் அதை முறியடிக்க தவறிவிட்டனர். 

நடப்பு உலகக் கோப்பையில் லீக் போட்டிகளின் முடிவில் ரோகித் ஷர்மா 647 ரன்கள் குவித்திருந்தார். இதனால் அவர் அரையிறுதிப் போட்டியில் 27 ரன்கள் குவித்து சச்சின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோகித் ஒரே ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். அத்துடன் இந்திய அணியும் அரையிறுதியில் தோற்று வெளியேறியது. இதனால் ரோகித் வாய்ப்பு பறிபோனது.

இதேபோன்று வார்னருக்கும் ஒரு வாய்ப்பு இருந்தது. அவர் லீக் போட்டிகள் முடிவில் 638 ரன்கள் குவித்திருந்தார். எனவே வார்னர் 35 ரன்கள் அடித்து சச்சின் சாதனையை முறியடிப்பார் என நினைத்தால், அவரும் அரையிறுதியில் 9 ரன்களில் அவுட் ஆகினார். அத்துடன் ஆஸ்திரேலியாவும் அரையிறுதியில் இருந்து வெளியேறியது. இதனால் இருவரும் வாய்ப்பை நழுவவிட்டுவிட்டனர். அடுத்த உலகக் கோப்பையிலாவது இந்தச் சாதனையை யாராவது முறியடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close