[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

இந்தியாவை வென்றதை நினைவு கூர்ந்த இங்கிலாந்து கேப்டன்

england-captain-morgan-said-about-victory-against-australia

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது மிக்க மகிழ்ச்சி என இங்கிலாந்து கேப்டன் மார்கன் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபாரமாக வென்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 223 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் ஸ்டீவ் ஸ்மித் மட்டும் 85 ரன்கள் எடுத்தார். அலெக்ஸ் கரே 46 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 32.1 ஓவர்களில் இலக்கை எளிதாக அடித்தது. அந்த அணியில் ஜாசன் ராய் 85 (65), ஜோ ரூட் 49 (46) மற்றும் மார்கன் 45 (39) ரன்கள் குவித்தனர்.

போட்டிக்குப் பின்னர் பேசிய மார்கன், “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் எங்களுக்காக இன்று மைதானத்திற்கு வந்து ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன். எட்ஜ்பாஸ்டன் மைதானம் எப்போதுமே எங்களுக்கு சிறப்பான ஒன்று. இந்தியாவை இந்த மைதானத்தில்தான் வென்றோம். அதனால் நாங்கள் நம்பிக்கையுடன் களமிறங்கினோம். நாங்கள் நினைத்தை விட சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியாவிற்கு பதிலடி கொடுத்தோம். ஞாயிற்றுக்கிழமை ஒரு பெரும் வெற்றியை பெறுவதற்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பு. அதன்மூலம் எங்களுக்கு ஒரு சிறந்த முடிவை பெற அனைவரும் விரும்புகிறோம்” என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close