[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி

’என் கடைசி மூச்சு இருக்கும்வரை...’ ஜடேஜா நெகிழ்ச்சி!

ravindra-jadeja-i-will-give-my-best-till-my-last-breath

’என் கடைசி மூச்சி இருக்கும்வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்’ என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடே ஜா தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையின் அரை இறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழை குறுக் கிட்டதால் இந்தப் போட்டி நேற்று தொடர்ந்து நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து 239 ரன்களை சேர்த்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 49.3 ஓவர்களில் 221 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. 

இந்தப் போட்டியில், 6 விக்கெட்டுக்கு 92 ரன்கள் என்ற இக்கட்டான நிலையில் இந்திய அணி இருந்தபோது, களத்துக்கு வந்தார் ரவீந்திர ஜடேஜா. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 59 பந்துகளில் 77 ரன்கள் விளாசி வியக்க வைத்தார். அவரும் தோனியும் (50) ஆட்டத்தை கடைசிவரை கொண்டு வந்தனர். இருந்தும் இந்திய அணி போராடி தோற்றது. ஜடேஜாவின் சிறப் பான ஆட்டத்துக்கு முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜடேஜா, தனது கடைசி மூச்சு இருக்கும் வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

’’ஒவ்வொரு முறையும் கீழே விழும்போது, சிறப்பாக எழுந்து நிற்க, இந்த விளையாட்டு எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. எனக்கு தூண்டுகோலாக இருக்கும் ஒவ்வொரு ரசிகருக்கும் நன்றி மட்டுமே போதுமானதில்லை. உங்கள் ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து உத்வேகம் கொடுங்கள். கடைசி மூச்சு இருக்கும் வரை சிறப்பான ஆட்டத்தை அளிப்பேன். அனைவருக்கும் அன்பு’’ என்று கூறியுள்ளார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close