[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்
  • BREAKING-NEWS இந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

இன்று 2 வது அரையிறுதி: ஆஸி.யை சமாளிக்குமா இங்கிலாந்து?

england-vs-australia-2019-cricket-world-cup-semi-final-preview

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து–ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

உலகக் கோப்பை தொடரில் முதலாவது அரையிறுதியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் நேற்று மோதின. இதில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது நியூசிலாந்து. இந்நிலையில் இரண்டாவது அரை யிறுதி போட்டி பர்மிங்காமில் இன்று நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

ஆஸ்திரேலிய அணி லீக் சுற்று முடிவில், 14 புள்ளிகள் பெற்று 2வது இடம் பிடித்தது. அந்த அணி பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் சிறப்பாக இருக்கிறது. பேட்டிங்கில் நடப்பு தொடரில் 638 ரன்கள் குவித்திருக்கிறார் டேவிட் வார்னர். ஆரோன் பின்ச், 2 சதம், 3 அரைசதம் உள்பட 507 ரன்கள் எடுத்திருக்கிறார். விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, ஸ்மித் ஆகியோரும் ஃபார் மில் உள்ளனர்.

பந்து வீச்சில் ஸ்டார்க், 26 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட் சாய்த்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவருக் கு கம்மின்ஸ், பேரண்ட்ரோப் பலமாக இருக்கின்றனர். காயம் காரணமாக கடந்த போட்டியில் ஆடாத ஸ்டோயினிஸ், ஷான் மார்ஷ்க்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகியோர் இன்றைய போட்டியில் களமிறங்குகிறார்கள்.

இங்கிலாந்து அணி, லீக் சுற்றில் 12 புள்ளிகள் எடுத்து 3வது இடம் பிடித்திருந்தது. அந்த அணியும் வலுவான அணியாகவே இருக்கிறது. பேட்டிங்கில் ஜோரூட், பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ், ஜேசன் ராய், மோர்கன், ஜோஸ் பட்லர் ஆகியோர் மிரட்டுகிறார் கள். பந்து வீச்சில் ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ், பிளங்கெட் ஆகியோர் ஃபார்மில் உள்ளனர். அதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

ஆஸ்திரேலிய அணி 1992 ஆம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பையில் இங்கிலாந்திடம் தோற்றதில்லை என்பதால், இன்றைய போட்டியில் அதிக நம்பிக்கையுடன் களமிறங்கும்.

போட்டி நடக்கும் பர்மிங்காமில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் போட்டி தடைபடலாம். பிற்பகல் 3 மணிக்கு ஆட்டம் நடைபெறுகிறது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close