[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

எப்போதும் தோனியையே நம்பிக் கொண்டிருக்க முடியுமா? சச்சின் கேள்வி

sachin-tendulkar-says-team-can-t-rely-on-rohit-sharma-virat-kohli-all-the-time

’எப்போதும் தோனி வந்து ஆட்டத்தை முடிப்பார் என்று நம்பிக்கொண்டிருக்க முடியுமா?’ என்று சச்சின் டெண்டுகல்கர் கேள்வி எழுப்பினார்.

உலகக் கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் நேற்று முன் தினம் மோதின. மழை குறுக்கிட்டதால் இந்தப் போட்டி நேற்று தொடர்ந்து நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, 239 ரன்களை சேர்த்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 49.3 ஓவர்களில் 221 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவும் (77) தோனியும் (50) கடைசி வரை போராடினர்.

போட்டிக்குப் பின் பேசிய சச்சின், ‘’240 ரன் வெற்றி இலக்கை சந்தேகம் இல்லாமல், இந்திய அணி எட்டிப் பிடித்திருக்க முடியும். இது பெரிய ஸ்கோர் அல்ல. தொடக்கத்திலேயே மூன்று முக்கிய விக்கெட்டுகளை நியூசிலாந்து வீரர்கள் வீழ்த்தி நெருக்கடி கொடுத்துவிட்டனர். ரோகித் மற்றும் விராத் கோலி ஆகியோரையே சார்ந்திருக்க முடியாது. அவர்கள் சிறப்பான தொடக்கம் தந்திருக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கக் கூடாது. அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது.

தோனியும் (50) ரவீந்திர ஜடேஜாவும் (77) சிறப்பாக ஆடினர். ஏழாவது விக்கெட்டுக்கு 116 ரன் பார்டனர்ஷிப் என்பது சிறப்பானது. எப்போதும் தோனி வந்து போட்டியை முடித்துக்கொடுப்பார் என்று எதிர்பார்ப்பது சரியானதல்ல. நியூசிலாந்து அணி சிறப்பாகச் செயல்பட்டது. வில்லியம்சனின் கேப்டன்ஸி வியக்கத்தக்கதாக இருந்தது’’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close