[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS கும்பகோணத்தில்‌ பாதாளச்சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தால் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

தன் ஸ்டைலில் பாட்டில் மூடி சேலஞ்ச் செய்த யுவராஜ்

watch-yuvraj-singh-nails-his-new-version-of-bottle-cap-challenge-harbhajan-singh-comes-up-with-hilarious-comment

யுவராஜ் சிங் தன்னுடைய பாணியில் பாட்டில் மூடி சேலஞ்ச் செய்து, அதனை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச், பிட்நஸ் சேலஞ்ச் எனப் பல்வேறு சவால்கள் சமூக வலைத்தளத்தில் தோன்றி மறைவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது பிரபலமடைந்து ட்ரெண்டாகி வருகிறது பாட்டில் மூடி சேலஞ்ச். கஜகஸ்தானை சேர்ந்த டேக்வாண்டோ தற்காப்பு கலை வீரர் பராபி டாவ்லட்சின், தண்ணீர் பாட்டிலை ஒருவர் பிடித்திருக்க மூடியை மட்டும் தனியாக தெறித்து பறக்கும் வகையில் பேக் கிக் (back kick) முறையில் பாட்டிலை உதைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

        

இதனை வேறு யாராவது செய்ய முடியுமா என சவால் விடுக்க, சமூகவலைத்தளங்களில் பாட்டில் மூடி சேலஞ்ச் ட்ரெண்டாகி விட்டது. ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், அமெரிக்க பாப் பாடகர் ஜான் மேயர், ஹாலிவுட் நடிகை ஒயிட்னி கம்மிங்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் பாட்டில் மூடி சேலஞ்சை வெற்றிகரமாக செய்து முடித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

       

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தன்னுடைய பாணியில் பாட்டில் மூடி சேலஞ்ச் செய்து, அதனை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாட்டில் மூடி சேலஞ்ச் என்றாலே, காலால் உதைத்து மூடியை தெறிக்க விடவேண்டும்.

ஆனால், கிரிக்கெட் பந்து மூலம் இதனை யுவராஜ் செய்துள்ளார். ஆம், தனக்கு முன்னே தண்ணீர் பாட்டிலை வைத்துவிட்டு, அதனை நோக்கி பந்தினை பேட்டால் அடிக்கிறார். பந்து நேராக சென்று பாட்டீல் மூடியை தனியாக தெறிக்கவிடுகிறது. யுவராஜ் சிங் பதிவிட்ட இந்த வீடியோவை ஹர்பஜன் சிங் பகிர்ந்துள்ளார். என்ன அற்புதமாக சேல்ஞ்ச் என அதில் பாராட்டியுள்ளார்.

 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close