[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

‘கங்குலி எனும் பாகுபலி’ - ஒரு ரசிகரின் புகழாரம்

ganguly-birth-day-wishes-by-face-book-fan

கங்குலி பிறந்த தினமான இன்று அவரைப் பலரும் புகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஜெகதீஷ் இந்திரகுமார் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கங்குலிக்கு  புகழாரத்தை சூட்டியுள்ளார் அதில், “சாப்பாட்டுக்கே கஷ்டம்; கஷ்டப்படுற குடும்பம்; ரொம்ப பாடுபட்டு தான் கிரிக்கெட் உள்ள வந்தாரு - இந்த மாதிரி எல்லாருக்கும் இருக்குற விக்ரமன் பட டெம்ப்ளேட் எல்லாம் கங்குலிக்கு கிடையாது. அவரு ராஜ குடும்பத்த சேந்தவரு. வங்கத்துலையே பெரிய குடும்பம் இவர் குடும்பம் தான்.

அப்புடி இருந்தும் அவருக்கு கிரிக்கெட் ஆட்டத்து மேல இருந்த ஒரு ஈர்ப்பு, காதல். அது தான் நமக்கு இன்றைக்கு இவ்ளோ பெரிய அரசன கொடுத்துச்சு. 'அவன் ராஜா டா'னு சொல்றதுக்கு எல்லா தகுதியும் படச்ச மனுசன். 1992 அப்போவே டீம்  உள்ள வந்தாலும் டிரிங்க்ஸ் தூக்குறது என் வேலை இல்ல'னு சண்ட போட்டதால், 4 வருசம் உள்ள வர முடியாம போச்சு. ராயல் குடும்பம் இல்லயா. அந்த திமிரு இல்லாமயா இருக்கும். அப்பறம் 1996ல் மறுபடியும் உள்ள வந்த மனுசன் வங்கத்திற்கு  மட்டும் இல்ல இந்திய கிரிக்கெட்டுக்கே அரசன் ஆனார்.

‘காட் ஆஃப் ஆஃப்சைட்’ (God of offside), பெஸ்ட் கேப்டன் அப்புடினு நிறைய பெயர்கள். பிறந்த நாளன்று அவரு அடிச்ச ரன்ஸ், சதங்கள், எடுத்த விக்கெட்டுகள் பத்தி பேசுவாங்க. ஆனா கங்குலி இந்த புள்ளி விவரங்கள் என்கிற குறுகிய வட்டத்துக்குள்ள சுருங்கிட மாட்டாரு. அவரு சாதிச்சது ரொம்ப அதிகம்.

அகிம்சையா போராடிட்டு இருந்த கூட்டத்துல எப்புடி நேதாஜி துப்பாக்கிய தூக்கிட்டு போனாரோ ! அதே மாதிரி தான் கங்குலி. பேட்ல மட்டும் இல்ல பேச்சுலையும் பதிலடி கொடுப்போம்னு ஆரம்பிச்சு விட்டது கங்குலி தான். கோலி இப்போ காட்டுற ஆக்ரோஷ நெருப்பு எல்லாம் கங்குலி ஊத்திட்டு போன எண்ணெயால் தான் அப்புடினு சொல்லிடலாம். அவ்ளோ இருக்கு.

ஆக்ரோஷத்துக்கு பேர் போன ஆஸ்திரேலியா காரர்களையே அப்புடி ஓரமா நில்லுனு டாஸ்ல நிக்க வச்சது. ஸ்டீவ் வாக் கூட டாஸ் போட ட்ரவுஸர்  மட்டும் போட்டு வந்தது. ஸ்டூவர்ட் பிராட் கிட்ட ‘கோ ஃபார் எ டிரிங்க் மேன்’ (go for a drink man) அப்புடினு சொல்லிட்டு சிக்ஸ் அடிச்சது என்றெல்லாம் சேர்த்து வச்சிருந்த மொத்த ஆக்ரோஷமும் டீம் உள்ள வரக் காரணம் கங்குலி தான். அந்த லார்ட்ஸ் செலப்ரேஷன்  பத்தி புதுசா சொல்லவா வேணும்.

அப்பறம் கங்குலி கண்டுபிடிச்ச திறமைகள். இந்த விசயத்துல தோனியே தோத்துடுவாரு. தோனி கண்டுபிடிச்ச ஆட்கள் கூட பாதியில் காணாம போயிட்டாங்க. ஆனா கங்குலி கூட்டிட்டு வந்த சேவாக், யுவி, பஜ்ஜி (ஹர்பஜன்), ஜாகீர் கான் எல்லாம் கடைசி வரைக்கும் நின்னு அவரு பேர சொல்லிட்டு போனாங்க.

சேப்பல் எனக்கு போன் பண்ண மாட்டாரு, கும்ப்ளே இல்லனா இந்த எடத்த விட்டுப் போவ மாட்டேன்னு அவரு எடுத்த அதிரடி எல்லாம் ரொம்ப அதிகம். சேவாக்கை தொடக்கம் பண்ண விட்டது, தோனியை டாப் வரிசையில்  போட்டதுனு சொல்லிட்டே போகலாம். யாருமே நெனைக்காத உச்சத்துக்கு எல்லாம் இந்தியாவ கூட்டிட்டு போய் விட்டாரு. 2000 சாம்பியன் கோப்பை  இறுதிப்போட்டி, 2002 சாம்பியன் கோப்பை இறுதிப்போட்டி, 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டி. அப்போ இருந்த ஆளுங்க கிட்ட கேட்டா சொல்லுவாங்க, இது எவ்ளோ பெரிய விசயம்னு. அணிகள் தரவரிசையில் இரண்டாவது வந்ததும் இவரு தலைமை ஏற்றிருந்த காலத்துல தான்.

ஜெயிக்கவே முடியாதுனு நெனச்ச வெளிநாட்டு தொடர் எல்லாம் ஜெயிக்க ஆரம்பிச்சது இவரு காலத்துல தான். டீம்ல இருந்து தூக்கிட்டா எப்படி சண்டை போட்டு உள்ள வரனும்னு யுவராஜ்க்கு முன்னாடியே எங்களுக்கு காமிச்சு கொடுத்ததும் இவரு தான்.

கங்குலி அரசன் தான்... ஆனால் செஸ் விளையாட்டில் இருக்குற மாதிரி எல்லாத்தையும் முன்னாடி விட்டுட்டு ஒளிகின்ற அரசன் அல்ல எங்க தாதா.. பாகுபலி மாதிரி களத்துல எறங்கி சண்டை செய்த அரசன். பாவம்.. பாகுபலிக்கு அரசர் பதவி கிடைக்காத மாதிரி கங்குலிக்கு உலகக் கோப்பை கிடைக்கவில்லை." என பதிவிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close