[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

’புகழ்ச்சியை பெருசா எடுத்துக்கறதில்ல’’: பும்ரா

bumrah-says

புகழ்ச்சியையோ, விமர்சனத்தையோ பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தெரிவித்தார்.

இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில், லீக் சுற்று போட்டிகள் முடிந்து அரையிறுதி போட்டிகள் நடக்க இருக்கின்றன. அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் முன்னேறியுள்ளன. நாளை நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அடுத்த அரையிறுதியில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான போட்டியின்போது, வேகமாக 100 விக்கெட்டுகளை சாய்த்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்தார். 57 போட்டியில் விளைாடி இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். முகமது ஷமி, 56 பேட்டிகளில் 100 விக்கெட்கள் வீழ்த்தியதே இந்திய பந்துவீச்சாளர்களின் சாதனையாக இருக்கிறது.

இதுபற்றி பும்ரா கூறும்போது, ’’இந்திய அணியில் அனைவரும் சிறப்பாக விளையாடும்போது, அது நல்ல தலைவலியாகவே இருக்கும். அடுத்து அரையிறுதியில் விளையாட இருக்கிறோம். என்னை புகழ்வதையோ, விமர்சிப்பதையோ தீவிரமாக எடுத் துக் கொள்வதில்லை. வழக்கம்போல என ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். இந்த தொடரில் ஹர்திக் பாண்ட்யா விக்கெட் வீழ்த்துகிறார். ஷமி, விக்கெட் எடுக்கிறார். நானும் விக்கெட்டுகளை சாய்க்கிறேன். இந்த பாசிட்டிவான விஷயங் களும், கூட்டு முயற்சியும் அணியை அடுத்தக் கட்டத்துக்கு முன்னேற்றியுள்ளன’’ என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close