[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

'ஆர் யூ ரெடி' கேட்ட மகள்; 'ஐ எம் ரெடி' சொன்ன தோனி: பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ

bcci-shared-dhoni-s-birthday-video

தோனியின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடப்பட்ட வீடியோவை பிசிசிஐ பகிர்ந்துள்ளது

இன்று தனது 38வது பிறந்தநாளை தோனி கொண்டாடி வருகிறார். தோனியின் கொண்டாட்டங்களால் சமூக வலைத்தளங்கள் களைகட்டியுள்ளன. தோனியின் ரசிகர்கள் பலரும் தோனியின் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தோனிக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். 

இந்நிலையில் தோனியின் பிறந்தநாளை இந்திய கிரிக்கெட் அணி கேக் வெட்டி கொண்டாடியது. தோனியின் மனைவி, மகள், இந்திய வீரர்கள் ஜடேஜா, பும்ரா, ராகுல், ஷமி, ரோஹித் சர்மா மற்றும் ரோஹித்தின் மனைவி, மகள் என பலரும் கலந்துகொண்டனர். கேக் வெட்டும் போது ஆர் யூ ரெடி என தோனியின் மகள் கேட்க, ஐ எம் ரெடி எனக்கூறிக்கொண்டு தோனி கேக் வெட்டினார். இந்த வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அந்த வீடியோவை பகிர்ந்த ரசிகர்கள், தோனி கேக் வெட்டுவதை காட்டிலும் இன்னும் சில சுவாரஸ்யங்கள் இந்த வீடியோவில் இருப்பதாக குறிப்பிட்டு வருகின்றனர். அனைவரும் பிறந்தநாள் பாடல் பாடி கைதட்டுவதை ரோஹித்தின் குழந்தை அதிர்ச்சியாய் பார்ப்பதையும், தோனியின் மகளை தூக்கி ஜடேஜா உடற்பயிற்சி செய்வதையும் ரசிகர்கள் சுட்டிக்காட்டி கிண்டல் செய்து வருகின்றனர்

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close