[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் நா.புகழேந்தி போட்டி
  • BREAKING-NEWS 2023-ஆம் ஆண்டுக்குள் தனியார் ரயில் சேவையைக் கொண்டுவர மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூருக்கு வரும் நீரின் அளவு இன்று இரவுக்குள் 50 ஆயிரம் கன அடியை எட்டும் - ஜல்சக்தி துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS விலை உயர்வு: ரூ.8 லட்சம் மதிப்புள்ள 100 மூட்டை வெங்காயம் கொள்ளை!

வார்னர் சதம் வீண்: வெற்றியுடன் விடை பெற்றது தென்னாப்பிரிக்கா!

south-africa-beat-australia-by-10-runs

உலகக் கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை, 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்க அணி.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில், ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. மான்செஸ்டரில் நடந்த இந்தப் போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர்களில், 6 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது. கேப்டன் டுபிளிசிஸ் அபாரமாக ஆடி, 93 பந்துகளில் சதம் அடித்தார். ஒரு நாள் போட்டியில் இது அவருக்கு 12-வது சதம். நடப்பு உலக கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் அடித்த முதல் சதம் இது.

வாண்டர் டுசன் 95 ரன்னும், குயின்டான் டி காக் 52 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், லியான் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அபார சதமடித்தார். அவர் 122 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு துணையாக விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 85 ரன் எடுத்து வீழ்ந்தார். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால் அந்த அணி, 49.5 ஓவர்களில் 315 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 

இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் தரப்பில், ரபாடா 3 விக்கெட் டும், பிரிடோரியஸ், பெலுக்வயா தலா 2 விக்கெட்டையும் இம்ரான் தாஹிர், கிறிஸ் மோரிஸ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். டுபிளிசிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இம்ரான் தாஹிருக்கும் ஆல்ரவுண்டர் டுமினிக்கும் இந்தப் போட்டி கடைசி ஒரு நாள் சர்வதேசப் போட்டி ஆகும். 

ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட தென்னாப்பிரிக்க அணி, இத்துடன் நடப்பு உலக கோப்பையில் இருந்து வெளியேறியது. 

லீக் சுற்றில், ஆஸ்திரேலிய அணி பெற்ற இரண்டாவது தோல்வி இது. முன்னதாக அந்த அணி, இந்தியாவிடம் தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
Related Tags : South AfricaAustraliaFaf du PlessisWarner
Advertisement:
Advertisement:
[X] Close