[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

ரோகித், ராகுல் அதிரடி சதம் - இலங்கையை ஊதி தள்ளியது இந்தியா

india-won-the-match-against-srilanka-by-7-wickets

இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றது

உலகக் கோப்பை தொடரில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய மேத்யூஸ் 113 (128) ரன் எடுத்தார். திரிமன்னே 53 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து, 265 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை இலங்கை வீரர்களால் பிரிக்க முடியவில்லை. அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 92 பந்துகளில் சதம் அடித்தார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இது அவருக்கு 5 ஆவது சதம். அவர் 103 ரன்னில் ஆட்டமிழந்தார். 

       

ரோகித் சர்மாவை தொடர்ந்து கே.எல்.ராகுலும் 109 பந்துகளில் சதம் அடித்தார். அவர் 118 பந்துகளில் 111 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் உடனா பந்துவீச்சில் 4 ரன்னில் வெளியேறினார். இறுதியில் இந்திய அணி 43.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. கேப்டன் விராட் கோலி 34 ரன்னுடனும், ஹர்திக் பாண்ட்யா 7 ரன்னுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

லீக் போட்டிகளில் இந்திய அணிக்கு 7 ஆவது வெற்றி ஆகும். இங்கிலாந்து அணியிடம் மட்டும் இந்தியா தோல்வியை தழுவியது. மற்ற எல்லா அணிகளுடனும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 

             

நடப்பு உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா இரண்டாவது வீரராக 600 ரன்களை கடந்துள்ளார். ஏற்கனவே, பங்களாதேஷ் அணியின் ஷகிப் அல் ஹாசன்(606) முதல் வீரராக 600 ரன்களை கடந்து இருந்தார். தற்போது, ரோகித் சர்மா 647 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

போட்டோ கேலரி

0 of 1

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close