[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

ஒரு உலகக் கோப்பையில் 5 சதங்கள் - ரோகித் சர்மா உலக சாதனை

rohit-sharma-1st-batsman-to-score-5-century-in-a-single-world-cup

ஒரே உலகக் கோப்பை தொடரில் 5 சதங்கள் விளாசிய வீரர் என்ற உலக சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மேத்யூஸ் 113 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் பும்ரா 3 விக்கெட் சாய்த்தார்.

Image result for rohit sharma

பின்னர், 265 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது. ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் சிறப்பாக விளையாடினர். ரோகித் சர்மா 92 பந்துகளில் சதம் விளாசினார். இந்த உலகக் கோப்பை தொடரில் இது அவருக்கு 5 ஆவது சதம். இதன் மூலம் ஒரே உலகக் கோப்பை தொடரில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு இலங்கை வீரர் சங்ககாரா 4 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close