[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

இலங்கையுடன் இன்று மோதல்: முதலிடத்துக்கு முன்னேறுமா, டீம் இந்தியா?

india-vs-sri-lanka-malinga-test-for-virat-kohli-co-ahead-of-semis

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் எந்தெந்த அணிகள் மோதவுள்ளன என்‌பதை தீர்மானிக்கும் கடைசி இரண்டு லீக் ஆட்டங்கள் இன்று ‌நடைபெறவுள்ளன‌. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு நடக்கும் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. ஆறு மணிக்கு நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடுகின்றன. 

இந்தியாவும், இலங்கையும் லீட்ஸ் மைதானத்தில் நடக்கும் 44-வது லீக் ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. 13 புள்ளியு டன் பட்டியலில் 2-வது இடம் வகிக்கும் இந்திய அணி, ஏற்கனவே அரைஇறுதிக்கு முன்னேறி விட்டது. இலங்கை அணி, அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. எனவே இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இந்திய வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் விராத் கோலியும் (408 ரன்), துணை கேப் டன் ரோகித் சர்மாவும் (544 ரன்) பேட்டிங்கில் வலுவாக உள்ளனர். வழக்கமாக இலங்கைக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை ரோகித் சர்மா வெளிப்படுத்துவார். இன்றைய போட்டியிலும் அவர் அமர்க்களப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம். பந்து வீச் சில் பும்ரா, முகமது ஷமி மிரட்டுகிறார்கள். 

இலங்கை அணி ஆறுதல் வெற்றியுடன் விடைபெற நினைக்கும். அதற்காக போராடும். அந்த அணியின் இளம் வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ சிறப்பாக ஆடிவருகிறார்.  வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவுக்கு உலகக் கோப்பையில் இது கடைசி போட்டி என் பதால், அவர் சாதிக்க முயற்சிப்பார். 

‌ சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இதுவரை 158 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள் ளன. இதில்‌ இந்திய அணி 90 போட்டிகளிலும்‌ , இலங்கை‌ அணி 56 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 11 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை. ஒரு ஆட்டம் டையில் முடிந்துள்ளது.‌

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவிடம் தோற்றால் புள்ளி பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு வந்துவிடும். அப்படி நடந்தால், அரை இறுதியில் நியூசிலாந்துடன் மோதும். இல்லையென்றால் இங் கிலாந்தை சந்திக்க நேரிடும்.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close