[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

பங்களாதேஷூடன் இன்று மோதல்: அதிசயம் நிகழ்த்துமா பாகிஸ்தான்?

world-cup-2019-pakistan-need-lightning-to-strike-bangladesh-team

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், இன்று நடக்கும் 43 ஆவது லீக் போட்டியில், பாகிஸ் தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி, நடப்புத் தொ‌டரில் 8 போட்டிகளில் விளையாடி, 4-ல் வெற்றியும், 3-ல் தோல்வியையும் சந்தித்துள்ளது.  மோர்டாஸா தலைமையி லான பங்களாதேஷ் அணி, 8 போட்டிகளில் விளையாடி 3  வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் தலா ஒரு போட்டி, மழையால் கைவிடப்பட்டுள்ளது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் இதுவரை 36 முறை நேருக்கு நேர் சந்தித் துள்ளன. அதில் பாகிஸ்தான் அணி 31 போட்டிகளிலும், பங்களாதேஷ் அணி 5 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளன

பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு

தற்போது 9 புள்ளிகளுடன் இருக்கும் பாகிஸ்தான் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 11 புள்ளிகளை பெறும். நியூசிலாந்து அணியும் 11 புள்ளிகளுடன் இருப்பதால், அரையிறுதி வாய்ப்பு இரு அணிகளில் ஒன்றுக்கு ரன் ரேட் அடிப் படையில் வழங்கப்படும். நியூசிலாந்து ரன் ரேட்டில் +0.175 ஆக இருக்கிறது. பாகிஸ்தானின் ரன் ரேட், -0.792 ஆக உள்ளது. நியூசிலாந்தின் ரன் ரேட்டை பாகிஸ்தான் முந்த வேண்டும் என்றால், இன்றைய போட்டியில் சில மேஜிக் நடக்க வேண்டும். 

அதாவது, பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து, 400 ரன்கள் எடுக்க வேண்டும். பங்களாதேஷை 316 ரன் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். பாகிஸ்தான் 350 ரன்கள் குவித்தால், பங்களாதேஷை 38 ரன்னில் சுருட்ட வேண்டும். இந்த மேஜிக் நடக்க வாய்ப்பில்லை. அதோடு, டாஸ் வென்று பாகிஸ்தான் முதலில் பேட் செய்தால்தான் இந்த வாய்ப்பும். பீல்டிங் செய்து விட் டால், சுத்தமாக அவுட். நியூசிலாந்து அணி அரைஇறுதிக்கு தகுதிபெறுவது உறுதி என்கிறார்கள்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close