[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

311 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் - ஆறுதல் வெற்றி பெறுமா ஆப்கான் ?

afghanistan-vs-west-indies-312-runs-target-afg

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்கள் குவித்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 42வது லீக் போட்டி ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் உள்ள ஹெட்டிங்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கிறிஸ் கெயில் 7 (18) ரன்களில் அவுட் ஆகினார். ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான எவின் லெவிஸ் அரை சதம் அடித்து 58 (78) ரன்களில் ஆட்டமிழந்தார். 

நிதானமாக விளையாடிய சாய் ஹோப் 77 (92) ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஹோப்புடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடிய ஹெட்மெயர் 39 (31) ரன்களில் வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த நிகோலஸ் பூரான் மற்றும் கேப்டன் ஜாசன் ஹோல்டர் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பூரான் 58 (43) ரன்களிலும், ஹோல்டர் 45 (34) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close