[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

ஆறுதல் வெற்றி கிடைக்குமா, ஆப்கானுக்கு? வெஸ்ட் இண்டீஸூடன் இன்று மோதல்!

afghanistan-vs-west-indies-battered-teams-look-to-leave-world-cup-with-consolation-win

உலகக் கோப்பையில் இன்று நடக்கும் போட்டியில், ஆப்கானிஸ்தான் -வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. 

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடக்கும் 42-வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை இழந்து விட்டதால் இது சம்பிரதாய ஆட்டம். அதோடு அந்த அணிகளுக்கு நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுதான் கடைசி போட்டி. 

ஆப்கானிஸ்தான் அணி, இதுவரை ஆடிய 8 போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் சுழற்பந்து வீச்சால் கடும் நெருக்கடி கொடுத்தது. வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியிலும் சுழலால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒரு வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 3 புள்ளி மட்டுமே பெற்றுள்ளது. அந்த அணியில் கெய்ல், லெவிஸ், பூரன், ஹெட்மையர், பிராத்வெய்ட் என அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுகிறார்கள்.

இன்று கடைசி போட்டி என்பதால் வெற்றி பெற இரண்டு அணிகளுமே முனைப்பு காட்டும். ஆப்கான் அணி, இந்தப் போட்டியிலாவது வெற்றி பெற்று நாடு திரும்ப நினைக்கும். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடும் சவால் கொடுக்கும். போட்டி, பிற்பகல் 3 மணிக்கு தொடங்கு கிறது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள், இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து ள்ளன. அவற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியிலும், ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளன. ஒரு போட்டி யில் முடிவு எட்டப்படவில்லை
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close