[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

வாய்ப்பு கிடைக்காத விரக்தி - ஓய்வை அறிவித்தார் அம்பத்தி ராயுடு 

rayudu-announced-his-retirement-from-international-cricket

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளார்.

இந்திய அணியில் முக்கியமான ஒரு வீரராக வலம் வந்தவர் அம்பத்தி ராயுடு. இந்திய அணியில் நான்காவது இடத்தில் களமிறங்கி விளையாடி வந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலகக் கோப்பை தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றிலும் சிறப்பாக செயல்படுவதால் விஜய் சங்கரை தேர்வு செய்ததாக அப்போது தேர்வுக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

           

உலகக் கோப்பை தொடரில் தான் தேர்வு செய்யப்படாதது குறித்து வெளிப்படையாகவே தன்னுடைய அதிருப்தியை அம்பத்தி ராயுடு தெரிவித்தார். விஜய் சங்கரை கிண்டல் செய்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்தினையும் தெரிவித்து இருந்தார். அம்பத்தி ராயுடு தேர்வு செய்யப்படாதது குறித்து ஐசிசி கூட தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து இருந்தது.

            

இதனையடுத்து, காயம் காரணமாக ஷிகர் தவான் விளையாட முடியாத சூழல் ஏற்பட்ட போதும், ரிஷப் பண்ட் அழைக்கப்பட்டார். அம்பத்தி ராயுடு அழைக்கப்படவில்லை. அதேபோல், காயம் காரணமாக விஜய் சங்கர் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக மயங்க் அகர்வால் அழைக்கப்பட்டுள்ளார். அனுபவம் வாய்ந்த அம்பத்தி ராயுடுவை விடுத்து மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்பட்ட போது சமூக வலைத்தளங்களில் அது விமர்சிக்கப்பட்டது. 

                    

உலகக் கோப்பை தொடரில் விளையாட தேர்வு செய்யப்படாததால் அதிருப்தியில் இருந்த அம்பத்தி ராயுடு, அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close