[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

ஆஸி.கிரிக்கெட் வீரர் வார்னருக்கு 3-வது பெண் குழந்தை!

warner-welcomes-new-child-in-london

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்-கேன்டிஸ் தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது. 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 512 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் அவர் மனைவி கேண்டிஸ் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக் கு அழகானப் பெண் குழந்தை பிறந்தது. இதை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வார்னர், தாயும்-சேயும் நலமுடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு இஸ்லா ரோஸ் என வார்னர் பெயரிட்டுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close