[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

சாமுவேல்ஸ் சதம் வீண்: இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா

smith-marsh-lead-australia-into-final

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆஸ்திரேலிய அணி ‌இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

பிரிட்ஜ்டவுனில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்தில் விக்கெட்களை இழந்து திணறியது. பின்னர் சாமுவேல்ஸ், ராம்தின் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ராம்தின் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். சாமுவேல்ஸ் ‌125 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்களில், வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது.

இதன்பின்னர், 283 ரன்கள் என்ற இலக்கை எட்டினால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியில் ஆஸ்திரேலிய அணி பின்னர் பேட்டிங் செய்தது. கேப்டன் ஸ்மித், மிச்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோரின் அதிரடியால் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்களை மட்டும் இழந்த நிலையில், 49ஆவது ஓவரில் வெற்றி பெற்றது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close