[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

கட்டாயத்தில் இங்கிலாந்து, அரையிறுதி முனைப்பில் இந்தியா: இன்று விறுவிறு மோதல்!

what-happened-when-india-last-met-england-in-a-world-cup

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

பர்மிங்காம் நகரில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடி யுள்ள இந்தியா 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டது.  நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்திய அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், சிக்கலின்றி அரை இறுதிக்குள் நுழைந்து விடும்.

இந்திய அணியில், ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், கேப்டன் விராத் கோலி ஆகியோர்  ஃபார்மில் உள்ளனர். மிடிலில் கேதர் ஜாதவ் நிதானமாக ஆடுகிறார். ஹர்திக் அதிரடி காட்ட,  நிலைமைக்கு தக்கவாறு ஆடி வருகிறார் தோனி. பந்து வீச்சில் பும்ரா, முகமது ஷமி மிரட்டுகின்றனர். சுழற்பந்து வீச்சாளர்கள் சேஹலும் குல்தீப்பும் இன்றைய போட்டியில் கலக்கலாம். 

இங்கிலாந்து பேட்டிங், பந்துவீச்சில் பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும் சமீபத்திய தொடர் தோல்விகள் அந்த அணியை சிக்கலில் தள்ளியுள்ளது. அந்த அணி விளையாடிய 7 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியையும், 3 போட்டிகளில் தோல்வி யையும் சந்தித்துள்ளது. அடுத்த 2 போட்டிகளில் வென்றால் மட்டுமே அந்த அணி அரையிறுதிக்குள் நுழைய முடியும்.

அந்த அணியில் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கேப்டன் மோர்கன், பட்லர், பேர்ஸ்டோ ஆகியோர் மிரட்டக் கூடியவர்கள். பந்து வீச்சில் ஆர்ச்சர், மார்க் வுட் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். கட்டாய வெற்றித் தேவை என்பதால் இன்றைய போட்டியில் விறு விறுப்புக்குப் பஞ்சமிருக்காது. 

பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 99 முறை நேருக் கு நேர் சத்தித்துள்ளன. அவற்றில் இந்தியா 53 போட்டிகளிலும், இங்கிலாந்து 41 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 

இன்றைய போட்டியில் இந்திய அணி வீரர்கள் ஆரஞ்சு நிற ஜெர்ஸி அணிந்து ஆடுகிறார்கள்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close