[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

‘விஜய் சங்கர் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது’: விராத் கோலி

vijay-shankar-is-close-to-playing-a-big-knock-for-us-says-virat-kohli

தமிழக வீரர் விஜய் சங்கர் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது. அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி சொன்னார்.

தமிழக வீரர் விஜய் சங்கர், உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், தனது முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி, அசத்தினார். அந்தப் போட்டியில் 2 விக்கெட் வீழ்த்திய அவர், 14 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆப்கானுக்கு எதிரான போட்டியில் 29 ரன்னும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 14 ரன்னும் எடுத்தார். அவர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல், வாய்ப்பை தவறவிட்டுவிட்டார் என்றும் அவருக்கு பதிலாக ரிஷாப் பன்டை சேர்க்க வேண்டும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய கேப்டன் விராத் கோலி, விஜய் சங்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர், ’’ விஜய் சங்கர், தனது முதல் போட்டியில் நன்றாக ஆடினார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், ஆடுகளம் கடினமாக இருந்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் கெமர் ரோச், அற்புதமாக பந்து வீசி அவர் விக்கெட்டை வீழ்த்தினார். கிரிக்கெட்டில் 30 முதல் 60 ரன்கள் வரை எடுக்க, சில நேரம் அதிர்ஷ்டம் வேண்டும். அப்படி இருந்தால் தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். அவர் அதை நெருங்கிவிட்டார். சிறப்பான இன்னிங்சை அணிக்காக அவர் வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

அணியின் 4 வரிசை வீரர் பற்றி பேச்சு எழுந்துகொண்டே இருக்கிறது. உலக கோப்பை தொடரின் முதல் 3 போட்டியில் 300-க்கு மேல் ரன்கள் எடுத்தோம். அப்போதெல்லாம் இந்த பேச்சு எழவில்லை. ரன் குறைந்துவிட்டால் இந்த பேச்சு எழுந்து விடுகிறது. இப்போதைய அணியே சரியானதாக இருக்கிறது’’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close