[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்
  • BREAKING-NEWS உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS சர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS தூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்

ஸ்டார்க் வேகத்தில் சரிந்தது நியூசி: ஆஸி. அபார வெற்றி!

alex-carey-mitchell-starc-to-the-fore-as-australia-thump-new-zealand

உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த போட்டியில், நியூசிலாந்து அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தியது.

உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதின. லாட்ஸ் மைதானத் தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

நியூசிலாந்து வீரர்களின் துல்லியமான பந்துவீச்சால், வார்னர் 16, ஆரோன் பின்ச் 8, ஸ்மித் 5, ஸ்டொய்னிஸ் 21, மேக்ஸ்வெல் 0 என ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 92 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

சரிந்த அணியை உஸ்மான் கவாஜா, விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஜோடி மீட்டது. இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். கேரி அதிரடியாக விளையாடி  71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிவரை போராடிய கவாஜா 50வது ஓவரில் 88 ரன்களுக்கு அவுட் ஆனார்.

 அவரது விக்கெட்டை தொடர்ந்து அடுத்த இரண்டு பந்துகளில் ஸ்டார்க், பேரண்ட்ராப் ஆகிய இருவரை அடுத்தடுத்து வெளி யேற்றி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார் நியூசிலாந்தின் போல்ட். இதன் மூலம் இந்த உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது வீரராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளார்.

 இதற்கு முன் இந்தியாவின் ஷமி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியிருந்தார். நியூசிலாந்து வீரர் ஒருவர் இச்சாதனையை நிகழ்த்துவது இதுவே முதல் முறை.

ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் போல்ட் 4 விக்கெட் சாய்த்தார். பெர்குசன், நீசம் தலா இரண்டு விக்கெட் சாய்த்தனர். 

பின்னர் 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்சனை (40 ரன்) தவிர வேறு யாரும் நிலைத்து நிற்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர் மார்டின் குப்தில் 20, அனுபவ வீரர் ராஸ் டெய்லர் 30, லாதம் 12 ரன்களில் வெளியேற, அந்த அணி 43.4 ஓவரில் 157 ரன்னுக்கு சுருண்டது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 86 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய தரப்பில், அபாரமாக பந்துவீசிய ஸ்டார்க், 5 விக்கெட்டுகளை சாய்த்தார். பேரண்ட்ராப் 2 விக்கெட்டும், கம்மின் ஸ், லியான், ஸ்மித், தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close