[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

“உங்களின் கிண்டல் எனக்குப் புகழ்ச்சிதான்” - கோலி சல்யூட்டிற்கு ஷெல்டன் பதிலடி

west-indies-fast-bowler-sheldon-cottrell-gave-an-epic-reply-to-indian-players

தன்னைப்போல சல்யூட் அடித்து கிண்டல் செய்த இந்திய வீரர்கள் குறித்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷெல்டன் காட்ரெல் கருத்து தெரிவித்துள்ளார்

கடந்த 27ம் தேதி நடைபெற்ற இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் போட்டியின் போது விக்கெட்டை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷெல்டன் காட்ரெல் தன் வழக்கமான பாணியில் சல்யூட் அடித்து தன் வெற்றியை கொண்டாடினார். இதனை கிண்டல் செய்யும் விதமாக இந்திய வீரர்கள் ஷமியும், இந்திய கேப்டன் விராட் கோலியும் சல்யூட் அடித்த விவகாரம் இந்திய ரசிகர்களிடையே வருத்தத்தை உண்டாக்கியுள்ளது.

அதாவது, 30ஆவது ஓவரில் காட்ரெல் ஆட்டமிழந்து வெளியேறி போகும் போது ஷமி சல்யூட் அடித்து கிண்டல் செய்தார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த போது விராட் கோலியும் காட்ரெல் சல்யூட்டை கிண்டல் செய்தார். இந்திய வீரர்களின் இந்தச் செயலுக்கு இந்திய ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். 

தான் ராணுவத்தில் பணிபுரிந்ததை நினைவுபடுத்தும் விதமாகவே சல்யூட் அடிப்பதாக ஷெல்டன் காட்ரெல் ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில்,  இந்திய வீரர்களின் கிண்டல் ராணுவத்தை கிண்டல் செய்வது போலத்தான் உள்ளது என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர். 

இந்நிலையில் இந்திய வீரர்கள் சல்யூட் அடித்து கிண்டல் செய்தது குறித்து அந்த சல்யூட் ஸ்டைலுக்கு சொந்தக்காரரான ஷெல்டன் காட்ரெல் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ''நல்ல கிண்டல். நல்ல பந்துவீச்சு. நீங்கள் என்னை கிண்டல் செய்தது எனக்கு மிகப்பெரிய புகழ்ச்சிதான்'' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close