[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

“தோனியும் கோலியும் மிகச் சிறந்த ஆளுமைகள்” - ரவி சாஸ்திரி

ravi-shastri-reveals-his-thoughts-on-dhoni-kohli-relationship

தோனி-கோலி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். 

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடிவுள்ளது. அதில் 5 போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளது. அத்துடன் ஒரு போட்டி மழையால் ரத்தானது. எனவே இந்திய அணி 11 புள்ளிகளுடன் உள்ளது. கடந்த போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. எனினும் இந்தப் போட்டி மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி ஆகிய இரண்டிலும் இந்திய அணியின் பேட்டிங் விமர்சனத்திற்கு உள்ளானது. குறிப்பாக இந்தப் போட்டிகளில் தோனியின் ஆட்டம் குறித்து சச்சின், சேவாக் உள்ளிட்ட முன்னாள் விரர்கள் விமர்சித்திருந்தனர். 

இந்நிலையில் தோனி மற்றும் விராட் கோலியின் உறவு குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்,“தோனி மற்றும் கோலி ஆகிய இருவருமே மிகச் சிறந்த ஆளுமைகள். இவர்கள் இருவரும் மிகவும் வலிமையானவர்கள் மற்றும் சாம்பியன் வீரர்கள்” எனப் பதிவிட்டுள்ளார். 

முன்னதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், “அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆட்டத்தை மாற்றுவது குறித்து தோனியிடம் ஆலோசித்துள்ளார். அத்துடன் இந்திய அணியின் வீரர்களிடமும் அணியின் மற்ற பயிற்சியாளர்களிடம் ரவி சாஸ்திரி அணியின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்” எனத் தெரிவித்திருந்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close