[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்ச நவ.29 இந்தியா வருகை
  • BREAKING-NEWS ரஜினி, கமல், விஜய் சேர்த்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS அவசியம் ஏற்பட்டால் நானும், ரஜினியும் இணைவோம் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்
  • BREAKING-NEWS உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தோனிக்குத் தெரியாததா? அவர் எங்களுக்கு லெஜண்ட்: விராத் கோலி

dhoni-s-experience-has-come-good-eight-out-of-ten-times-kohli

அணிக்கு என்ன தேவை என்பதும் எப்படி ஆட வேண்டும் என்பதும் தோனிக்கு தெரியும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி சொன்னார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ்- இந்திய அணிகள் நேற்று மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்தது. விராத் கோலி 72 ரன்களும் தோனி 56 ரன்களும் எடுத்தனர்.  பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 34.2 ஓவரில் 143 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. இந்திய தரப்பில் முகமது ஷமி, 4 விக்கெட் வீழ்த்தினார். சேஹல், பும்ரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது விராத் கோலிக்கு கிடைத்தது. 

பின்னர் தோனியின் ஆட்டம் பற்றி  அவரிடம் கேட்டபோது, ‘’அணிக்கு என்ன தேவை என்பது தோனிக்கு தெரியும். அதன்படி தான் மிடில் ஓவரில் ஆடி வருகிறார். சில நேரங்களில் ஆடாமல் இருக்கலாம். அது எல்லோருக்கும் நடக்கிற ஒன்று. ஆனால் அவர் ஆடவில்லை என்றால் மட்டும் எல்லோரும் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இந்தப் போட்டியில் அவர் சரியாகவே செயல்பட்டார். கடைசி நேரத்தில் எப்படி ஆட வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அவரது அனுபவம், பத்துக்கு 8 முறை அணிக்கு சரியாகவே உதவியிருக்கிறது. சிறப்பாக கிரிக்கெட் ஆடும் வீரர்கள் பலர் அணியில் இருக்கிறார்கள். ஆனால், தோனி மட்டும்தான் இந்த பிட்ச்-சில் எந்த ஸ்கோர் சிறந்தது என்கிற தகவலை தருபவராக இருக்கிறார். இந்த பிட்ச்-சில் 265 நல்ல ஸ்கோர் என்று அவர் சொன்னால், நாங்கள் 300 ரன்னுக்கு முயற்சிக்கவும் மாட்டோம். 230-க்குள் முடிக்கவும் மாட்டோம். அவர் எங்களுக்கு லெஜண்ட் போன்றவர். அவருக்கு ஆதரவாகவே இருக்கிறோம். இந்தியாவுக்காக பல போட்டிகளில் அவர் வெற்றி தேடி தந்தவர்.

கடைசி இரண்டு போட்டிகளில் நாங்கள் நினைத்த மாதிரி நடக்கவில்லை. ஆனாலும் வெற்றி பெற்றோம். வெஸ்ட் இண்டீ ஸுக்கு எதிரான போட்டியில் ஸ்கோர் 250 ஆக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். தோனி, 270-க்கு நெருக்கமாக கொண்டு வந்தார். கடைசி ஓவரில் அவர் அடித்த இரண்டு சிக்சர்கள் முக்கியமானது. பாண்ட்யாவும் சிறப்பாக விளையாடினார்’’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close