[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

நியூசிலாந்தை வீழ்த்திய பாக். அணிக்கு இம்ரான் கான் பாராட்டு

imran-khan-congratulates-pakistan-for

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பர்மிங்காமில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் அணி வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிதி சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வெற்றி பெற 238 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி,  பாபர் அஸாமில் அபார சதத்தால் வெற்றி பெற்றது. பாபர் 101 ரன்களும் ஹரிஸ் சோஹைல் 68 ரன்களும் எடுத்து வெற்றிக்கு காரணமாக இருந்தனர்.

இந்த வெற்றியை அடுத்து பாகிஸ்தான் பிரதமரும், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் அந்த அணிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில், ’’சிறப்பாக மீண்டும் வந்திருக்கும் நமது கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள். குறிப்பாக பாபர், ஹாரிஸ், ஷகீன் ஷா ஆகியோருக்கு வாழ்த்துகள். மூவரும் சிறப்பாக விளையாடினார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close