உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை, இந்திய அணி இன்று சந்திக்கிறது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 34 வது லீக் போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது. இதில், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரில் இந்திய அணி, இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. 9 புள்ளியுடன் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, இன்றைய ஆட்டத்தில் வென்றால் அரை இறுதி வாய்ப்பு உறுதியாகி விடும்.
இந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடுமையாகத் தடுமாறியது. தோற்றும் விடும் என்ற நிலையில் போராடி வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் சுழல்பந்துவீச்சுக்கு எதிராக இந்திய வீரர்கள் கடுமையாகத் திணறினர். குறிப்பாக, அனுபவ வீரர் தோனி பந்துகளை எதிர்கொள்ள சிரமப்பட்டார். இதனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானர். சச்சின் தெண்டுல்கர் உட்பட சிலர், தோனியின் பேட்டிங் பற்றி அதிருப்தி தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி தன் மீதான விமர்சனங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, கேப்டன் விராத் கோலி, கே.எல்.ராகுல், கேதர் ஜாதவ் ஆகியோர் ஃபார்மில் இருக்கின்றனர். இன்றைய போட்டியிலும் இவர்கள் சிறப்பாக செயல்பட்டால், இந்திய அணியின் வெற்றி எளி தாகும். பந்துவீச்சில் பும்ரா தூணாக இருக்கிறார். காயம் ஆறிவிட்டதால், இன்றைய போட்டியில் புவனேஷ்வர்குமார் களமிறங்குகிறார். சுழலுக்கு குல்தீப், சேஹல் இருக்கின்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 6 போட்டிகளில் ஆடி, 3 புள்ளிகள் மட்டுமே வைத்துள்ளது. அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்டுள் ள அந்த அணியில், சிலர் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். சாய் ஹோப், பூரன், ஹெட்மையர், பிராத் வெயிட் ஆகியோர் ஃபார்மில் உள்ளனர். இருந்தாலும் நிலையான ஆட்டத்தை யாரும் தரவில்லை. பந்து வீச்சில் காட்ரெல், தாமஸ், ஆல்ரவுண்டர் பிராத்வெய்ட், கெமர் ரோச் சிறப்பாக ஆடிவருகின்றனர். இவர்களின் ஷாட் பிட்ச் பந்துகள், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும்.
சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 126 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இந்திய அணி 59 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 62 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்!
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்
"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்" ப.சிதம்பரம் சாடல்
கருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு
போக்குவரத்து விதிமீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்!